மோசமான வானிலை - விழிப்புடன் இருக்குமாறு பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப்பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'கவனமாக இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப்பிரிவு
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப்பிரிவு
விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவு
கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகப்பிரிவு
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவு
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுள்ள, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'விழிப்புடன் இருக்குமாறு' எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 28,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.