நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இன்று மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் சிறிய அளவிலான மோதல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியே வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைதிகளை மீண்டும் சிறை அறைகளுக்குள் அனுப்பியுள்ளார்.
சிறைச்சாலையை சுற்றி பாதுகாப்பு
இதனால் இன்றைய தினம் முற்பகல் நீர்கொழும்பு சிறைச்சாலையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மோதல் இடம்பெற்ற தினத்தன்று நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்த ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறைச்சாலைக்கு வெளியேயுள்ள பகுதியில் இருந்து 9 மி.மீ மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டெடுத்துள்ளனர்.
You May Like This..
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri