இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
வெசாக் பண்டிகைக் காலத்தில்தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தங்களது தங்க நகைகள் உள்ளிட்ட தங்களது மதிப்புமிக்க பொருட்களைத் திருடர்களிடமிருந்து பாதுகாக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
சிறப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தல்
வெசாக் பண்டிகைக்காலத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் சமய நடவடிக்கைகள் நடைபெறுவதை உறுதிசெய்ய, சில சிறப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நடனம் ஆடுதல், முகக்கவசம் அணிந்திருத்தல், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்ளுதல், பொது இடங்களில் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் துன்புறுத்தும் வகையில் இசை வாத்தியங்களை ஒலிரவிடுதல், கோயில்கள் மற்றும் பந்தல்களுக்கு அருகில் பொருத்தமற்ற இசை அல்லது பாடல்கள் போன்றவற்றினை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஒலிபெருக்கிகளைக்கொண்டு பிறருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நடந்துகொள்ளுமாறும், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட நடைமுறையின்படி அனுமதி பெறுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வெசாக் பண்டிகைக்காலத்தில் விகாரைகள், வெசாக் பந்தல்கள், கண்காட்சிகள், பக்திப்பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் தானசாலைகள் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri