பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரும், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமியின் தாயாரும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுர பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் (22) இந்த உத்தரவை வழங்கியது.
பிணையில் செல்ல அனுமதி
தேரருக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீர பிணைகளும், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணையும் விதிக்கப்பட்டது.
சிறுமியின் தாயாருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீர பிணைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இருவருக்கும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது, சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவளை அழைத்து வந்ததாகவும், நீண்டகால பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடம், பயன்படுத்தப்பட்ட அறை உள்ளிட்டவற்றை சிறுமி நேரடியாக அடையாளம் காட்டியிருந்ததாகவும் கூறப்பட்டது.
சிறுமியை வன்கொடுமை செய்த பின்னர், தேரர் தாயாரின் கையில் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும், வறுமை காரணமாக அந்தப் பணத்தை பெற்றதாக தாயார் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
84 தொலைபேசி உரையாடல்கள்
எனினும், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முறையீட்டு தரப்பில் முன்னிலையான நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர், சம்பவத்துக்கான ஆரம்ப விசாரணைகள் முடிக்கப்பட்டு சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபர் தேரருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள், பொலிஸாரின் அதே விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்களது வாடிக்கையாளர் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைத்துள்ளதாகவும், ஆகையால் பிணை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் வலியுறுத்தினர்.
ஆனால், பொலிஸார் விசாரணைகளை பாகுபாடுடன் மேற்கொண்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றஞ்சாட்டியது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இனோகா ரணசிங்கவும், சட்ட அமலாக்கப் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோனும் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் மூலம், பொலிஸாரின் விசாரணைகள் எவ்வளவு பலவீனமாகவும் பாதமாகவும் இருந்தன என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தேரரும் சிறுமியும் இடையே 84 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாக தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத மற்றும் பண அதிகாரம் கொண்ட இத்தகைய தேரருடன், சாதாரண சிறுமி ஒருவருக்கு இவ்வளவு தொடர்பு ஏற்பட முடியுமா என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
இத்தனை வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், நிட்டம்புவ பொலிஸார் சந்தேகநபர் தேரரை கைது செய்யாமல், டி.என்.ஏ பரிசோதனைக்குத் தேவையான உயிரியல் மாதிரிகளைக் கூட பெறாமல், பதினேழு நாட்கள் சுதந்திரமாக இருக்க அனுமதித்திருந்தனர்.
நோயாளியாக நடிக்க முயன்றமை
நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டவுடன், இதற்கு முன் எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாத தேரர் நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோயாளியாக நடிக்க முயன்றதும் பின்னர் தேசிய வைத்தியசாலையின் ஆறு நிபுணர் மருத்துவர்களின் பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வயதானதால் ஏற்படும் சாதாரண நீண்டகால நோய்களைத் தவிர, அவருக்கு வேறு எந்தக் கடுமையான நோயும் இல்லை என்று அப்போது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் காணொளி வாக்குமூலம் கூட முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என சிறுமி தரப்பில் முன்னியைான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
நிட்டம்புவ பொலிஸாரின் விசாரணையில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது என்பதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இந்த முழு விசாரணையையும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒப்படைக்குமாறு சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் வலியுறுத்தினார்.
ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக இத்தனை வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam