யாழில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை கடத்திச் சென்றவர் கைது
யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் இன்று (24.10.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த சந்தேகநபரிடமிருந்து 6 அரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |