இலங்கை பிரபலங்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி - கடும் அச்சத்தில் பல நடிகைகள்
பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலியை தொடர்ந்து அதிகளவான இலங்கை பிரபலங்கள் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகத் தலைவருடனான தொடர்பு குறித்து விசாரிக்க நேற்று முன்தினம் பியூமி குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குற்ற புலனாய்வு பிரிவு
கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் இருந்த சில புகைப்படங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, பியூமி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார்.
பியூமி தனது பேஸ்புக் பக்கத்திலும் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கமைய, பியூமி 2022ஆம் ஆண்டு டுபாயில் நடந்த நிகழ்வொன்றில் பத்மேவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பிரபலமான நடிகைகள்
அங்கு வெள்ளையாகுவதற்கு கிறீம் வேண்டும் என கெஹல்பத்தர பத்மே கேட்டதாகவும், பின்னர் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் பியுமி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசிகளில் புகைப்படங்களில் உள்ள பல பிரபலமான நடிகைகள் எதிர்காலத்தில் குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிடைத்த தகவலுக்கமைய, பல நடிகைகளின் புகைப்படங்கள் பத்மேவின் கையடக்க தொலைபேசிகளில் இருந்ததாக தெரியவந்துள்ளது.