குண்டுதாரிக்கு நீர்கொழும்பு ஆலயத்தை காண்பித்த சுரேஷ் சலே..!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில், 2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை.
அதனோடு, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி...
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam