லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம்.. திடீரென கழன்று விழுந்த சக்கரத்தால் பரபரப்பு
லண்டன் நோக்கி புறப்பட்ட பிரித்தானிய ஏர்வேஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரத்தை இழந்தமை பெUம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் ஒன்றிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்த காட்சி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது.
கழன்று விழுந்த சக்கரம்..
நேற்றைய தினம் இரவு, லொஸ் வேகாஸில் இருந்து புறப்பட்டபோது, லண்டன் நோக்கிச் செல்லும் ஏர்பஸ் A350-1000 விமானத்திலிருந்து பின்புற சக்கரம் கழன்று விழுந்துள்ளது.

மேல் நோக்கி பறக்க ஆரம்பித்த போது, தரையிறங்கும் கியரின் பின்புறப் பகுதியிலிருந்து ஒரு நிழல் சக்கரம் கீழே விழுந்துள்ளது.
British Airways A350-1000 loses one of its main gear wheels on departure from Las Vegas Harry Reid International Airport.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) January 27, 2026
The incident captured on a Flightradar24 automated live stream occurred last night on the BA274, as reported by @flightradar24.
The flight continued for a… pic.twitter.com/ftMM7ixrR4
இதனை தொடர்ந்து, திட்டமிட்டதை விட 27 நிமிடங்கள் முன்னதாக, விமானம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பாதுகாப்பாக லண்டனில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சக்கரம் கழன்று விழுந்தமைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam