வடக்கு மாகாண பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
வடக்கு மாகாண பொதுச் சேவையில் காணப்படுகின்ற தொழில்நுட்பத் துறை சார்ந்த பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறியினால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன.
தகைமையுடைய விண்ணப்பதாரிகள்
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பதவிகள் விவரம் வருமாறு:
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - குடிசார் (Technical Officer - Civil) தரம் III அல்லது பயிற்சித் தரம்.
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - மின்னியல் (Technical Officer - Electrical) தரம் III அல்லது பயிற்சித் தரம்.
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் - படவரைஞர் (Technical Officer - Draughtsman) பயிற்சித் தரம்.

இதன் பொருட்டான முழுமையான விளம்பர அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.np.gov.lk எனும் மாகாண இணையத்தளத்தில் 'Exam and Recruitment Advertisement 2026' எனும் பகுதியின் ஊடாகப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்யவும் முடியும்.
தகைமையுடைய விண்ணப்பதாரிகள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 2026.02.12 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri