இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா..! வெளியான புகைப்படத்தினால் சர்ச்சை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலில் காயமடைந்து கொல்லப்பட்டுவிட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நெதன்யாகு போன்ற முகம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளமை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்றும், இதுவே அவருடைய கடைசி புகைப்படம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
எனினும், இது ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் அல்லது டிஜிட்டல் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என்றும், தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது உண்மைக்கு புறம்பான செய்தி என்றும், நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகின்றார் என்றும், ஊடகத்தினரிடம் தொடர்பு கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்