ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு இராணுவ பாதுகாப்பு! அமெரிக்காவின் அதிரடி திட்டம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும், வளைகுடா பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாலும், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியுள்ளது.
உலகச்சந்தையில் எரிசக்தி நிலைத்தன்மை
இந்தச் சூழலில் உலகச் சந்தையில் எரிசக்தி நிலைத்தன்மையை உறுதி செய்ய ஏப்ரல் 11-ஆம் திகதி வரை இந்தத் தற்காலிகத் தளர்வு வழங்கப்படும் என அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் அறிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ரஷ்யாவிற்கு சுமார் 10 பில்லியன் டொலர் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும், இது போரை நீடிக்கவே உதவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலை கட்டுப்பாடுகள்
இருப்பினும், பிரித்தானியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த முடிவைப் பின்பற்றப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளன.
இதற்கிடையில், எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் எரிபொருள் விலைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அமெரிக்காவின் இந்தத் தளர்வு ஒரு குறுகிய கால நடவடிக்கை மட்டுமே என்றும், இது ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயத்தைத் தந்துவிடாது என்றும் அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பை வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri