உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
இராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல்
அதன்படி, ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பல முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.
புலனாய்வு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போர் விமானங்கள் ஈரானின் பல பகுதிகளில் விரிவான தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
பெய்ரூட் மற்றும் பெக்வா வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத கிடங்குகள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயுத கிடங்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்
ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், ஷெய்ரஸ் மற்றும் அவாஸ் ஆகிய இடங்களில் உள்ள இராணுவ உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்கு ஈரானின் அஹ்வாஸ் பகுதியில் உள்ள ஈரான் ஆட்சி அமைப்புகளின் தலைமையகங்களும் இந்த தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் முதல் வாரத்திலேயே ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த இராணுவ நடவடிக்கையின் வேகம் குறையவில்லை என்றும், தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்த நிலையில், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam