மனோ கணேசனுடன் அநுர நீண்ட நேர அழைப்பு! எம்.பி. பகிரங்கம்
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உச்சக்கட்ட போர் பதற்றத்தில் மத்திய கிழக்கு! 24 மணி நேரத்தில் குறிவைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இலக்குகள்
புதிய குற்றச்சாட்டு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாங்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாரம் ஒருமுறையாவது இரவு 10 மணிக்குப் பின்னர் எனக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பேசுவார்.

பல்வேறு விடயங்கள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் கலந்துரையாடுவோம். ஆனால், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், நான் அவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் கூட அவரிடமிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. அது பரவாயில்லை என்றார்.
ஜனாதிபதியான பிறகு அநுரகுமார திஸாநாயக்கவுடனான தொடர்பாடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்து மனோ கணேசன் எம்.பி. வெளியிட்ட இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிக இரகசியமான ஆயுதக்கிடங்கை காட்சிப்படுத்தி அதிரடி காட்டும் ஈரான்... Strait of Hormuz வழியான கப்பல்களுக்கு இலக்கு!
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri