மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத்திற்கான மாபெரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி
கிழக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் நவீன தொழில்நுட்ப அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் புதிய நவீன உற்பத்தியாளர்களை உருவாக்கும் நோக்குடனும் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் கிழக்கு மாகாணத்திற்கான மாபெரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியொன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் தொழிலதிபர் மு.செல்வராஜா தெரிவித்தார்.
காட்சிப்படுத்தப்படவுள்ள விடயங்கள்
எதிர்வரும் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளதாகவும், இவற்றில் வீடமைப்பு, கட்டுமானம், மின்சக்தி, எரிசக்தி, தொழில்துறை இயந்திரங்கள், கருவிகள், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் என்பன உட்பட நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்கள், தொழில்துறை சார்ந்தவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில்துறையினையும் வர்த்தக துறையினையும் வலுப்படுத்தும் கண்காட்சியாக இதனை நடத்தவுள்ளதுடன் நவீன தொழில்நுட்பங்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று பெற்றுக்கொள்வதற்கு பதிலாக ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று உலகில் பல்வேறு நவீன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவந்து விவசாயத்துறை, கட்டிடத்துறை, மீன்பிடித்துறை உட்பட பல்வேறு துறைசார்ந்த நவீன இயந்திரங்களை மட்டக்களப்புக்கு கொண்டுவந்து தொழில்துறை சார்ந்தவர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தலைவர் செல்வராஜா இதன்போது தெரிவித்தார்.

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
