யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து! 21 பேர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பேருந்து விபத்து இன்று(4) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
