முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(4) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் பலி
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று வீழ்ந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய சங்கரப்பிள்ளை சசிகலா என்ற பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலதிக தகவல்: சதீஸன்-சுமந்தன் செல்வராசா








சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
