சுவிட்சர்லாந்தில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி அனுஷ்டிப்பு
சுவிட்சர்லாந்து - சூரிச் நகரில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உட்பட மாவீரர்கள் அனைவரையும் நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது, நேற்று (27.11.2026) போராளிகள் கட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 12.30 மணிக்குச் சிறப்பாகத் தொடங்கிய இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உரை முடிவில் ஒரு நிமிடம் ஒலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, சரியாகப் பிற்பகல் 1.35 மணிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், சமநேரத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் மாவீரர்களுக்குமான சுடர்களை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் ஏற்றி வைத்துள்ளனர்.
மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.




Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri