அரச ஊழியர்களின் சம்பள உயர்வு பொருளாதாரச் சுமை : சதி நடப்பதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு
அரச ஊழியர்களின் மேலதிக சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளப் போராட்டங்களுக்குப் பின்னால் நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் திட்டமிட்ட சதி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் மீது பொருளாதார சுமை
2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ரூ.150 பில்லியன் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், 2028 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மொத்தம் ரூ.400 பில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.

அதில், ரூ.250 பில்லியன் – மூலதனச் செலவுகளுக்கும், ரூ.150 பில்லியன் – அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.
அத்துடன், 2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் ரூ.6,230 பில்லியனாகவும், மொத்தச் செலவினம் ரூ.7,035 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிகபட்சமான 36% தனிநபர் வருமான வரி அறவிடப்படும் மாத வருமான எல்லையை 2028ஆம் ஆண்டில் ரூ.500,000 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.