இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் சுற்றுலா பயணிகளால் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை திரும்ப பெறுவதற்காக, VAT Refund கவுண்டர் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தால் கட்டுநாயக்க விமான விமான நிலைய வளாகத்தில் நிறுவப்பட்ட VAT Refund கவுண்டர், அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அனில் ஜெயந்த ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபாவுக்கும் அதிகமான வற் வரி செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், அவர்கள் செலுத்திய வற் வரித்தொகையை பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கும் இலங்கையில் வரி வருமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த செயல்முறை குறித்து வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாத் துறையினருக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
