கண்டியில் கைது செய்யப்பட்ட பிரதான போதைப்பொருள் வியாபாரி
கண்டி நகரில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தேன, அம்பகமுவ பகுதியில் வைத்து நாவலப்பிட்டிய – ரம்புக்பிடிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் 490 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு கினிகத்தேன பொலிஸார் கண்டிக்கு சென்றனர்.
போதைப்பொருள் விற்பனை
நபர் ஒருவர் ஊடாக கஞ்சா வாங்குவது போல திட்டம் வகுத்து, சந்தேகநபரை கண்டி புதிய வீதிக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
அவர் வந்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதற்குள் இருந்து 24 கஞ்சா பக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 40 வயதான சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
