சுங்கத்துறையின் புதிய இயக்குநர் மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர்க்கட்சி
இலங்கை சுங்கத்துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சீவலி அருக்கொட, சமீபத்திய கொள்கலன் மோசடியில் ஈடுபட்டவர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ரெட் லேபள் கொள்கலன்கள் விவகாரத்தை விசாரித்த குழு சீவலி அருக்கொட மீதும் குற்றம் சுமத்தும் என அவர் இதன்போது கூறியுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
அதிகாரப்பூர்வ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எவ்வாறு இவ்வாறானதொரு உயர்பதவியை வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், சீவலி அருக்கொட மீது அரசாங்கம் ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியது எனவும் அவர் வினவியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி, நியமனத்தை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam