திடீர் போர் பதற்றத்தில் சர்வதேச நாடுகள்! எரிபொருள் ஏற்றுமதியை அதிரடியாக நிறுத்தும் நிறுவனங்கள்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சகம் நாட்டின் இயற்கை எரிவாயு நீர்த்தேக்கங்களின் (Natural Gas Reservoirs) சில பகுதிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"தற்போதைய சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளின்படி" இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் ஏற்றுமதி
நாட்டின் எரிசக்தி தேவைகள் மாற்று ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தி மின் நிலையங்களை இயக்க மின்சாரத் துறை தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளது.

இதேவேளை, ஹார்முஸ் ஜலசந்தியில் எரிபொருள் ஏற்றுமதியை சில எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளனதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி நிறுத்தம்
பிராந்தியத்தில் நடந்த தாக்குதல்களுக்கு மத்தியில், சில முன்னணி எண்ணெய் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரேபிய தீபகற்பத்திற்கும் ஈரானுக்கும் இடையில் செல்லும் தமனி நீர்வழி வழியாக சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் பிற வகையான எரிபொருள் பயணிக்கின்றதாக தெரியவந்துள்ளது.
“எங்கள் கப்பல்கள் பல நாட்கள் நிறுத்தப்பட்டிருக்கும்,” என்று வர்த்தக நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri