மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம்! எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது சற்று முன்னர் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய், பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கிறது.
இந்தத் தாக்குதல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை மோதல் மண்டலத்திற்குள் கொண்டு வந்துள்ளதால் இது மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியில் சாத்தியமான இடையூறுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணெய் விலை உயர்வு
இந்தநிலையிலே, பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 72.48 டொலராக நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் தற்போதைய போர்ப்பதற்றத்தால் விலைகள் 80 டொலராக அதிகரிக்கக் கூடும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, போர்ப்பதற்றம் குறைவடைந்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை சரிவைக் காணும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மத்தியக் கிழக்கில் தற்போது மூண்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, உலக சந்தையில் தொடர்ந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதுடன் இன்றைய நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5278 டொலராக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 93.72 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam