உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் தான் வசித்து வந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அமைதியாக வெளியேறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகார பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார் .
பொரலஸ்கந்தை பிரதேசத்தில்
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை ரத்து செய்து, ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு மைத்திரி இவ்வாறு வெளியேறியுள்ளார்.
மைத்தரிபால சிறிசேன பெரும்பாலும் பொரலஸ்கந்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தொடர்ந்து வசிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




