திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை..! வெளியான அறிவிப்பு
திடீரென ஏற்பட்ட இதய பிரச்சினை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் பல வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஏற்பட்ட அவசர நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்
இருப்பினும், அவருக்கு எவ்வித கடுமையான பிரச்சினைகளும் இல்லை என வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவரது ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மனநலம் குன்றிவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது வயது முதிர்வை கருத்தில் கொண்டு, வழக்கமான வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக மகிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri