20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த
இந்த வாரம் முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சிடும் பிரிவில் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் 'சேப்பல்' பிரிவின் பிரதான பிரிவில் இருவரும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல்முறையீட்டு ஆவணங்களைத் தயாரிப்பதற்கு
அரசுக்கு 53 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தால் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அரசுக்கு 53 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சதோசா மூலம் கரம் போர்டுகளையும் செக்கர்ஸ் (டாம்) போர்டுகளையும் இறக்குமதி செய்து கழகங்களுக்கு விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேல்முறையீட்டு ஆவணங்களைத் தயாரிப்பதற்காக தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகலுக்காகக் காத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 41 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
