மகிந்தானந்தவின் வழக்கு கடந்து வந்த பாதை...

Mahindananda Aluthgamage Gotabaya Rajapaksa Sri Lankan political crisis
By Aanadhi May 29, 2025 07:41 PM GMT
Report

2015ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌சவின் வெற்றிக்காக விளையாட்டு அமைச்சின் 39,061,290 ரூபா நிதியைச் செலவிட்டு, லங்கா சதொச ஊடாக 14 ஆயிரம் கரம் மற்றும் 11 ஆயிரம் தாம் விளையாட்டுப் பலகைகளை இறக்குமதி செய்து அரசியல் ஆதரவாளர்களுக்கு விநியோகம் செய்திருந்தார்.

பியகமையில் இருந்த தேர்தல் அலுவலகம் ஒன்றில் இருந்து விநியோகிக்கப்படாமல் எஞ்சியிருந்த சில விளையாட்டு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.

அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அதன் பின் வந்த நல்லாட்சிக் காலத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு (FCID) மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு,கடந்த 2015ம் ஆண்டு BC/2399/15 முதல் தகவல் அறிக்கையின் மூலம் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.


அன்றைய கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க முன்னிலையில் இந்த விடயம் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்னும் ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள் எழும்! இயக்குனர் கௌதமன் கண்டனம்

இன்னும் ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள் எழும்! இயக்குனர் கௌதமன் கண்டனம்

மகிந்தானந்த அளுத்கமகே

ஆரம்பத்தில் மகிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டு அமைச்சின் களஞ்சியப் பொறுப்பாளர் அஜித் பிரசன்ன ஆகியோர் மட்டுமே சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி பிரதி சொலசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி,  நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்த வழக்கை மீள பெறுவதாக அறிவித்திருந்தார்.

மகிந்தானந்தவின் வழக்கு கடந்து வந்த பாதை... | Path Taken Mahindananda Case

குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருக்கு மேலதிகமாக சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த நளின் பெர்னாண்டோவும் சந்தேக நபராக பெயரிடப்பட இருப்பதாகவும், குறித்த சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக விரைவில் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து மகிந்தானந்த மற்றும் அஜித் பிரசன்னவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட அமர்வின் (ட்ரையல் அட் பார்) முன்பாக HCPTB 02/02/19 இலக்கத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டின் 06ம் மாதம் 27ம் திகதி மகிந்தானந்த அளுத்கமகே, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ, விளையாட்டு அமைச்சின் களஞ்சியப் பொறுப்பாளர் அஜித் பிரசன்ன ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

ஆர்.குருசிங்க, சஷி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சந்தேக நபர்களை தலா ஒருலட்சம் ரூபா மற்றும் பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டது.

ரணில் தலைமையில் புதிய அரசியல் கட்சி

ரணில் தலைமையில் புதிய அரசியல் கட்சி

வழக்கு விசாரணை

அதன் பின் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் வழக்கு அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. 2022ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனவுடன் வழக்கு மீண்டும் தூசுதட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2024ம் வருடம் ஜூலை மாதம் 09ம் திகதி குறித்த வழக்கு விசாரணையின் போது, வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கும் நிலைக்கு வந்திருந்தது.

வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட மகிந்தானந்த தரப்பு வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப காரணிகளை முன்வைத்து வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை தெரிவித்தனர்.

மகிந்தானந்தவின் வழக்கு கடந்து வந்த பாதை... | Path Taken Mahindananda Case

வழக்குத் தொடுக்கப்பட்ட விதம் பிழையானது என்றும் எனவே பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிக்காமலேயே வழக்கைத்தள்ளுபடி செய்யுமாறும்,தங்கள் கட்சிக்காரர்களை குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்யுமாறும் மகிந்தானந்த தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதிவாதிகள் தரப்பு கோரிக்கை தொடர்பில் உடனடியாக பதில் வழங்குவதாகத் தெரிவித்த ட்ரையல் அட் பார் நீதிபதிகள் அமல் ரணராஜா (தலைவர்) மகேஷ் வீரமன், பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் வழக்கை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.

எனினும் அதே ஜூலை 11ம் திகதி மகிந்தானந்த தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கை முன்கொண்டு செல்வதாக தீர்ப்பளித்தது. அதன் பின்னர் எந்தவொரு வழக்குத் தவணையிலும் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

தேர்தல் பணிகளை காரணம் சாட்டி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த ஏப்ரல் 23ம் திகதி இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அதன் ​போது ட்ரையல் அட்பார் அமர்வின் முன்பாக விசாரிக்கப்படும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரியான தகவல்களை அறிந்திருக்கவில்லை.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சட்டமா அதிபரின் ஆலோசனை

அதே ​நேரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ட்ரையல் அட் பார் (மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு) இன்றைய தினம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன் மூலம் மகிந்தானவுக்கு இருபது வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US