ரணில் தலைமையில் புதிய அரசியல் கட்சி
புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறி, புதிய அரசியல் கட்சியை நிறுவுவதற்கு பாடுபடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்று அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கை
அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளினால் மக்கள் ஆணை வழங்கியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்போது நாம் புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என ரணில் இதன்போது கூறியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக புதிய உறுப்பினர்கள் கட்சிக்காக ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றனர்.
குறித்த பதவியேற்பு விழா ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்றது.
முன்னணி கட்சி ஆர்வலர்கள் உட்பட ஒரு குழு மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
