கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(29.05.2025) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் பங்கேற்புடன் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகியது.
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகள் மற்றும் கடந்த ஆண்டில் தீர்மானங்கள் எட்டப்பட்ட விடயங்களின் முன்னேற்ற தன்மையும் குறித்தும் ஆராயப்படவுள்ளன.
இக் கலந்துரையாடலில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,ஜெ.ரஜீவன் ஸ்ரீ பவானந்தராஜா , கஜேந்திரகுமார் சிவஞானம்சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
