நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் இன்று(1) பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, கடற்றொழில் மற்றும் கடற்படை படகுகளுக்கு விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசி வீடுகள், வணிக கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில்,இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோர கடலில், இன்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாம்.

சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் திணைக்களத்தின் இயற்கை ஆபத்துகள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை
எனவே, மிகவும் கொந்தளிப்பான கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நிலவும் மோசமான வானிலை காரணமாக 14 மாவட்டங்களில் 7,239 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam