ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வருமாறு மொட்டுக் கட்சி கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசு முயற்சித்து வருகின்றது. அத்துடன், அரச பலத்தைப் பயன்படுத்தி தமது தரப்பில் இழைக்கப்பட்ட தவறை மறைப்பதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு கோரிக்கை
எனவே, ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையொன்றை முன்வைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியிடம் கோருகின்றோம். அவ்வாறு கொண்டு வந்தால் எங்கு தவறிழைக்கப்பட்டது என்பது உட்பட அனைத்து தகவல்களும் தெரியவரும்.
தேசிய மக்கள் சக்தியில் மனச்சாட்சியின் பிரகாரம் செயற்படும் எம்.பிக்களும் அதனை ஆதரிக்கக்கூடும். அப்போது அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் ஆட்டம் காணும் என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam