மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை பணிப்பாளர் (நீரியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அவர், இன்று (12) காலை இந்த தகவலை வழங்கியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, குறிப்பாக ஜின் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் யான் ஓயா படுகைகளின் மேல் பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களிலும் கிட்டத்தட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
இதன் காரணமாக சில ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும், வெள்ள அளவு அதிகரிக்கம் அபாயத்தை இது குறிக்கவில்லை என்று சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டு, கிட்டத்தட்ட 34 முக்கிய நீர்த்தேக்கங்களில் இன்னும் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெதுரு ஓயா, ராஜாங்கனை, நச்சதுவ, யான் ஓயா, பதவிய, லுணுகம்வெஹெர மற்றும் சேனாநாயக்க சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri