கொழும்பில் பாடசாலை கட்டடத்திலிருந்து விழுந்து மாணவன் படுகாயம்
கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து மாணவன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(11.3.2026) இடம்பெற்றுள்ளது.
தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயம்
சம்பவம் குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூடிய வகுப்பறைக்குள் ஜன்னல் வழியாக நுழைய முயன்றபோது சிறுவன் தவறி விழுந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பள்ளியின் வருடாந்திர கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றதால் வகுப்பறை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri