மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்
ஹார்முஸ் நீரிணை வழியாக பெரும்பாலான கப்பல்கள் போர் பதற்றத்தால் தடைபட்டு நிற்கும் நிலையில், இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்களுக்கு அந்தப் பாதையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக பல கப்பல்கள் சண்டையின் மத்தியில் சிக்கிக் கொள்ளும் அச்சத்தால் அங்கு காத்திருக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை
ஆதாரங்களின் தகவலின்படி, இந்தியக் கப்பல்கள் நேற்று(11)இரவு முதல் இன்று(12) காலை வரை பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், Liberia நாட்டின் கொடியை ஏந்திய, சவுதி அரேபியா நாட்டின் மூல எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு எண்ணெய் டேங்கர் கப்பல் இதன் கேப்டன் இந்தியர் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்து,மும்பை துறைமுகத்தில் புதன்கிழமை தங்கியது.
A detailed conversation this evening with Foreign Minister @araghchi of Iran on the latest developments regarding the ongoing conflict. We agreed to remain in touch.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 10, 2026
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இரானை தாக்கியதையடுத்து கடல் போக்குவரத்து பெரும்பாலும் நிறுத்தப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று இந்த நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்ற முதல் நிகழ்வாக இது அமைந்தது.
அமெரிக்காவின் எதிர்ப்பு
செவ்வாய்க்கிழமை, எஸ்.ஜெயசங்கர் தனது ஈரானிய இணை அமைச்சர் செய்ட் அப்பாஸ் அரஹாச்சி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அப்போது மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் சமீபத்திய பதற்ற நிலை குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல் இரு வாரங்களுக்கு அருகில் நீடித்து வரும் நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை இரு தரப்புகளுக்கும் இடையிலான முக்கிய மோதல் மையமாக மாறியுள்ளது.
இந்த நீரிணை மீது கட்டுப்பாடு இருப்பதாக ஈரான் கூறி வரும் நிலையில், அதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.