கொழும்பு மாநகர சபையில் நடந்த பாரிய மோசடி அம்பலம்
கொழும்பு மாநகர சபையின், மாநகர தொழிற்சாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக பெற்றுள்ள பாரிய கொடுப்பனவு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த ஊழியர்கள் கிட்டத்தட்ட 800,000 ரூபாய் (ரூ.779,704) கூடுதல் நேர ஊதியத்தைப் பெற்றதாக தேசிய தணிக்கை அலுவலக அறிக்கை கூறுகிறது.
நகராட்சி தொழிற்சாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், கூடுதல் நேர கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறை ஊதியம் குறித்து தணிக்கையின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான அறிக்கை
இதற்கமைய, கைரேகை இயந்திர அறிக்கைக்கு மாறாக, 'சரிபார்ப்புப் பட்டியலில்' வருகை நாளாக ரூபா 393,594 பெறப்பட்டுள்ளதாகவும், கைரேகை இயந்திர அறிக்கையின்படி ரூபா 247,567 பெறப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை, ஊதியம் இல்லாத விடுப்பு வழக்குகளில் ரூபா 96,101 பெறப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமைகள், மறுநாள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வேலை செய்யாமல் இருந்ததற்கு ரூபா 42,442 பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமான கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் நடந்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலாலியில் அதிரடி காட்டும் அமெரிக்க விமானம் - சிவப்புக் கம்பளம் விரிக்கும் அநுர - தடுமாறும் இந்தியா..!
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri