இராணுவத்தில் அரசியல் தலையீடு! குற்றச்சாட்டு வைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராணுவத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் தலையீடு செய்வதாக உள்ளக தகவல்கள் மூலம் தெரிவந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
'திவிதென ரணவிரு' (Dividena Ranu) அமைப்பால் அநுராதபுரத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த போது,
உள்ளக தகவல்களில் தெரியவந்துள்ளவை
இராணுவத்தில் அரசியல் தலையீடு குறிப்பிட்ட அளவிற்கு இருப்பதை நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக தீர்மானிக்க முடியாது. இருப்பினும், நாம் ஓய்வு பெற்ற போதிலும் இராணுவத்திற்குள் உள்ள தொடர்புகள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.
பல்வேறு அதிகாரிகள்- உறவினர்கள், நண்பர்கள் , சீடர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களில், சில நேரங்களில் அவர்களால் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிகிறது.
வருத்தத்துடன் தான் அதைக்கூற வேண்டியுள்ளது. ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடவோ, காலை வாரவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.

நாங்கள் மரணித்தாலும் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையும் பொறுப்பும் இந்நாட்டில் எமக்கு இன்னமும் உள்ளது. அதனால் தான், சரியான நேரத்தில், சரியான விடயங்களை செய்வதற்காக நாம் ஒன்று கூடியுள்ளோம்.
அந்த நம்பிக்கையை மக்கள் இராணுவ வீரர்கள் மீது வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில காலங்களில் நாம் நாடு முழுவதும் உள்ள மாவீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri