தியாக தீபன் விவகாரத்தில் மறைக்கப்பட்ட மதுசிகான் - உடைக்கப்படும் இரகசியங்கள்
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் முக்கிய காரணமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர் சி.வி.கே. சிவஞானம் பார்க்கப்படும் நிலையில், இலங்கை அரசின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலேயே திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ள கருத்து, மீண்டும் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் தெளிவான அனுமதி வழங்கப்படாத நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பொலிஸார், தமிழர்களால் புனிதமானவராகக் கருதப்படும் திலீபனின் சிலையை அகற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அதேவேளை, சிலை அமைப்பதற்காக சிறப்புப் பிரேரணையை முன்வைத்த மாநகர சபை உறுப்பினர் மனுசிகானின் பெயரைப் பயன்படுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகச் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், கட்சி உறுப்பினர்கள் விரும்பினால் முதலமைச்சராகப் பதவியேற்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்த சுமந்திரன், இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்து மௌனம் காப்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
சிலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போதே, அதனை அகற்றுவதற்கான திகதி சி.வி.கே. சிவஞானத்தினால் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஊடகச் சந்திப்பில் அவர் இதனை மறுத்திருந்தார்.
இந்த நிலையில், திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் மாநகர சபையும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர் மனுசிகான் மற்றும் மாநகர சபை முதல்வர் ஆகியோரின் பங்கு என்ன?
சிலை அகற்றப்பட்டதற்கு உண்மையில் காரணமான விடயங்கள் என்ன? இவை தொடர்பான பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் அலசி ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி,