சுற்றுலா அமைச்சின் செயலாளராக மீண்டும் மகிந்த சிறிவர்தன
பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மகிந்த சிறிவர்தன இன்று மீண்டும் தனது கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார்.
திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள், நிதியமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கே.எம்.எம்.சிறிவர்தன மத்திய வங்கியில் 30 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியவர்.
இலங்கை மத்திய வங்கி
அவர் பிரதி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் மற்றும் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2017 ஜூலை முதல் அக்டோபர் 2019 வரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தொகுதிக்கான மாற்று நிர்வாக இயக்குநராக சர்வதேச நாணய நிதியத்தினால் நியமிக்கப்பட்டார்
அவர் 2010, அக்டோபர் முதல் ஏப்ரல் 2015 வரை நிதிக் கொள்கைத் துறையின் இயக்குநராகவும், தேசிய திட்டமிடல் துறையின் கூடுதல் இயக்குநராகவும் நிதி அமைச்சில் பணியாற்றினார்
சிறிவர்தன, இலங்கை வங்கி, கொமர்ஷல் பேங்க் ஆஃப் சிலோன் பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கையின் முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உட்பட பல நிறுவனங்களில் பணிப்பாளர் சபை மற்றும் திறைசேரி பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |