மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுக்கு மத்தியிலும், அமைதி பேச்சுவார்த்தை குறித்த எதிர்பார்ப்புகளால் சர்வதேச சந்தையில் இன்று (29) கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 82 சென்ட் (0.7%) குறைந்து 114.50 டொலராகவும், அமெரிக்க WTI மசகு எண்ணெய் 1.04 டொலர் (1.0%) குறைந்து 101.74 டொலராகவும் வர்த்தகமானது.
கட்டாரின் புதிய அமைதி திட்ட முன்மொழிவு
ஈரானின் பாதுகாப்பு சபை தலைவருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அமைதிப் பேச்சுவார்த்தையை புதுப்பிக்கும் வகையில் கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் செங்கடல் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் அதேவேளையில், கட்டாரின் புதிய அமைதி திட்ட முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்