புதுக்குடியிருப்பில் இடம்பெறவுள்ள பிரதேச விற்பனைச் சந்தை
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனைச் சந்தை ஒன்று நாளையதினம் (09.03.2024) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற உள்ளது.
தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் , உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுதாெழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு, மகளிர் விவகார அமைச்சு, தொழிற்துறை திணைக்களம், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற உள்ளது.

குறித்த விற்பனை சந்தையில் புதுக்குடியிருப்பு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு தேவையான உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri