வரவு செலவுத்திட்டத்தில் புறந்தள்ளப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்: சாணக்கியன் காட்டம் (Video)
முப்பது வருட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தினூடாக எந்தவொரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (13.12.2023) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நிதி ஒதுக்கீடு
“இந்த வருடம் நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஆனால் இந்த 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் நலன் சார்ந்த எந்தவொரு விடயமும் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படவில்லை.
அத்துடன், முப்பது வருட காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வரவு செலவுத்திட்டத்தினூடாக எந்தவொரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
எங்களுடைய மக்களுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் செய்யாவிட்டாலும் அவர்களை அச்சுறுத்துவதை நிறுத்தி அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |