யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்பிற்காக பெருந்தொகை பணம் ஒதுக்கீடு: சிறீதரன் சபையில் கேள்வி (Video)
யுத்தமில்லாத, 15 ஆண்டுகளாக குண்டு சத்தம் கேட்காத நாட்டில் தொடர்ந்தும் பல பில்லியன் பணத்தை பாதுகாப்பிற்காக ஒதுக்கி வைத்திருந்தால் நாட்டினுடைய பொருளாதாரம் எவ்வாறு வளரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(13.12.2023) நாடாளுமன்றில் இடம் பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தின் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிக முக்கியமாக இம்முறை கொண்டுவரப்பட்ட வரவ செலவு திட்டத்தினுடாக பல விடயஙடகள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்ற வருடமும் வரவு செலவு திட்டத்தினுடாக தேர்தலுக்கு நிதி ஒதுக்கிடப்பட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் செயற்பாடுகள் அறிவிக்கப்பட்டது ஆனால் இது அறிக்கையாகவே நாடாளுமன்றில் இருக்கின்றது.
மொத்த வரவ செலவு திட்டத்தில் 15.2 வீதமான பகுதி பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் இப்போது யுத்தம் இல்லை.எங்கேயும் குண்டு சத்தம் இல்லை. யாரும் துப்பாக்கி தூக்கியதாக தெரியவில்லை.
இந்த நாட்டிலுல்ல படைகளை குவித்து இராணுவ வலயமாக வடக்கு கிழக்கை வைத்துக் கொண்டு இவ்வளவு நிதியையும் திரும்ப ஒதுக்கீடு செய்வதென்றால் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் எவ்வாறு வளர முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |