நாட்டில் தலைதூக்கும் வன்முறைக் கலாசாரம்.. சட்டத்தரணிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையில் தற்போது நிலவும் சட்டமற்ற சூழ்நிலை மற்றும் வன்முறை கலாசாரத்திற்குச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஒரு சில சட்டத்தரணிகளே பிரதான பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (16.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையைத் தாக்கி
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலங்களில் நாட்டின் ஜனாதிபதி மாளிகையைத் தாக்கி, பொதுச் சொத்துக்களுக்குப் பாரிய சேதங்களை விளைவித்த நபர்களை, நீதிமன்றத்திற்குள் கைதட்டி வரவேற்று அவர்களைச் சில சட்டத்தரணிகள் உத்வேகப்படுத்தினர்.

இவ்வாறு குற்றவாளிகளைக் கொண்டாடியதன் விளைவையே இன்று நாடு அனுபவித்து வருகின்றது ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.
அன்று சட்டத்தை மீறுபவர்களைக் கௌரவித்தவர்கள், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற உண்மையை இன்று உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam