சட்டத்தரணிகளின் வேலை நிறுத்தம்! முக்கிய வழக்கிலிருந்து தப்பிய நாமல்..
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் நேற்றையதினம்(16) முன்னெடுத்திருந்தனர்.
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்றுமுன்தினம் (15) தீர்மானம் எடுத்தது.
அதனை தொடர்ந்து நேற்றையதினம்(16) சட்டத்தரணிகள் பணிப்புறக்ணிப்பு செய்ததால் பல வழக்குகள் விசாரிக்கபடாமல் அந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதில் பல அரசியல் முக்கியஸ்தர்களின் வழக்ககுகளும் அடங்குகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் ஆர்ப்பாட்டம் காரணமான இன்றையதினத்திற்கு (17) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கிரிஷ் தொடர்மாடி வழக்கு விசாரணைக்காக அவர்களின் தரப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்த போதும் சட்டத்தரணிகள் இல்லாது திரும்பி சென்றுள்ளனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் news insight நிகழ்ச்சி...
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக் Cineulagam