2007இல் மாயமான பிரித்தானியக் குழந்தையின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில்! வெளியான திடுக்கிடும் தகவல்
உலகளாவிய ரீதியில் எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான பிரித்தானிய குழந்தையின் பெயர் இருப்பதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.
2007ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியத் தம்பதியர் தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள்.
திடுக்கிடும் தகவல்
மேலும், ஜேர்மானியரான கிறிஸ்டியன் (Christian Brueckner) என்பவர் மேட்லினை கடத்தியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

எப்ஸ்டீன் ஆவணங்களில் தான் மேட்லினை பார்த்ததாக ஒரு பெண் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு, தான் கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லைப் போன்ற ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததாகவும், அவரது கையில் சுமார் ஆறு வயதுடைய ஒரு குழந்தை இருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஆதாரம்
சற்று தொலைவில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நின்றுகொண்டிருந்ததாகவும், தான் அருகில் சென்று பார்க்கும்போது, அந்தக் குழந்தை மேட்லினைப் போலவே இருந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் அங்கு சென்றது அந்தப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றும், அவர் வேகமான அங்கிருந்து செல்ல முயன்றதாகவும், அந்தக் குழந்தை தன் வலது கண்ணை கையால் மூடிக்கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேட்லினுக்கு coloboma என்னும் அரிய பிரச்சினை இருந்ததால், அவளுடைய வலது கண்ணின் கண்மணி வித்தியாசமானதாக இருக்கும்.
அந்தப் பெண் இப்படி மேட்லின் குறித்து ஒரு விடயத்தைக் கூறியுள்ளதாக திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க பொலிசாரோ, பிரித்தானிய பொலிசாரோ அதை புதிய ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam