லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மர்ம பொதி - வரலாற்றில் முதன்முறை
கட்டுநாயக்க விமான நிலையத்தின் Cargo Village 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத்தின் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டன.
இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிகரட் பொதி
இந்த சிகரெட் தொகுப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்கள் மற்றும் லண்டன் நகரத்திற்கு அனுப்பப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாயிலிருந்து அனுப்பப்பட்ட இந்த சிகரட் பொதிகளுக்குள் பிளாஸ்டிக் கப்கள் உள்ளதென தவறாக அறிவிக்கப்பட்டிருந்தன.
சிகரெட்டுகள்
சுங்கச் சட்டத்திற்கமைய, இலங்கை வழியாக போக்குவரத்தாகும் பொருட்களின் உண்மையான உள்ளடக்கங்கள் முழுமையாக சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த பொதிகளில் 22,39,400 Top Gun மற்றும் Manchester பிராண்ட் சிகரெட்டுகள் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



