சீரற்ற காலநிலை - நானுஓயாவில் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு
கடந்த நாட்களில் சீரற்ற காலநிலையின் காரணமாக நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்கள் தோட்ட குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் தங்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு பொருட்கள்
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிந்த நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான திலீப் குமார் மற்றும் திருச்செல்வம் ஆகியோர் நேற்று குறித்த மக்களை சந்தித்து அவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான மேலதிக தேவைப்பாடுகளை பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்துடனும் அனர்த்த முகாமைத்துவ குழுவுடனும் கலந்துரையாடி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.






