சிறையில் இருக்கும் பிள்ளையானின் அதிர்ச்சி செயல்! வெளிவந்த பகீர் தகவல்..
சிறையில் இருந்த காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் செயற்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது அது தொடர்பான விடயங்கள் பிள்ளையானால் கூறப்பட்டதான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் போது பிள்ளையான் தான் இருந்த சிறைச்சாலை சிறைகாவலர்களிடம் இதுவொரு தற்கொலை தாக்குதல் என்று திட்டவட்டமாக கூறியதாக ஒரு ஊடகவியலாளர் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையான் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடித்த சத்தம் கேட்டதும் தனது சகாக்களுடன் கொண்டாடத்தில் ஈடுபட்டதாக விசாரணையின் பொது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..



