கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி அமைப்பு செயலிழந்துள்ளதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட 'எல்லைக் கட்டுப்பாட்டு கணினி அமைப்பு' இன்று பிற்பகல் 01.45 மணியளவில் செயலிழந்ததாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தானியங்கி அமைப்புக்கு வெளியே பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கணினி அமைப்பு
எனினும் 02 மணி நேரத்திற்கும் மேலாக கணினி அமைப்பை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் இந்த கணினி அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam