ஜனாதிபதியும் அல்ல.. எம்.பியும் அல்ல! என்றும் நிறைவேறாத நாமலின் கனவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாவது ஒரு புறமிருக்க, எதிர்வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் நாமல் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகக் கூட முடியாத நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமை ரத்து
இது தொடர்பில் தாம், நாமலுக்கு சவால் விடுப்பதாக ருவான் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளை ரத்து செய்வதனால் பொதுமகன் ஒருவருக்கு ஆண்டொன்றில் நான்கு ரூபாய் கிடைக்கும் என்ற பிரசாரம் பொய்யானது என அவர் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் இந்த வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட்டதனால் மக்களுக்கு கிடைக்க பெறும் நன்மைகளை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
